அறிமுகம்:
பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடியையோ கான்டாக்ட் லென்ஸையோ அணிய விருப்பம் இல்லாதவர்களுக்கு சிறந்த தீர்வாக லேசிக் உள்ளது. Laser-Assisted In Situ Keratomilensis என்பதன் சுருக்கமே LASIK (லேசிக்). எக்சைமர் லேசர் உதவியுடன் கருவிழியின் வடிவத்தை நிரந்தரமாக மாற்றும் மருத்துவ நடைமுறையே லேசிக். நவீன லேசர் தொழில்நுட்பம் மூலம் லேசிக் சிகிச்சை செய்யப்படுவதால் தெளிவான பார்வை கிடைக்கும்.
லேசிக் சிறப்புகள்:
  • நவீன சிகிச்சை முறை
  • பாதுகாப்பானது
  • சிகிச்சைக்கு பிறகு தழும்புகள் இருக்காது
  • விரைவில் குணமடையலாம்
  • மிகக் குறைவான பக்க விளைவுகள்
  • மொத்த நடைமுறைக்கும் 30 நிமிடங்களுக்கு குறைவாகவே தேவைப்படும்.
  • ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு கண்களிலும் லேசிக் செய்யப்படும்.
  • சிகிச்சைக்கு பிறகு கண்ணில் கட்டு போடும் அவசியம் இல்லை.
லேசிக் சிகிச்சை யார் செய்து கொள்ளலாம்?
  • 21 – 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • ஒரு வருட காலத்திற்குள் கண்ணாடியின் பவர் மாறாமல் இருக்க வேண்டும்.
  • காண்டாக்ட் லென்ஸ் அணிபவர் எனில் லேசிக் சிகிச்சைக்கு 2 வாரங்களுக்கு முன் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கண்களைப் பரிசோதிக்கும்போது ஆரோக்கியமான கருவிழி (Cornea) இருக்க வேண்டும்.
  • கண்களைப் பரிசோதிக்கும்போது விழித்திரை (Retina) ஆரோக்கியமனாதாக இருக்க வேண்டும்.
லேசிக் செய்து கொள்ள விரும்புவர்களுக்கு விரிவான கண் பரிசோதனை லேசிக் மருத்துவரால் செய்யப்படும். நோயாளியின் கண்கள், லேசர் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ளும் தகுதி உள்ளதா என்பதைக் கண்டறிந்த பின்னரே லேசிக் சிகிச்சை செய்யப்படும். Back to English version