நீங்கள் நேராகப் பார்க்கும்போது உங்கள் கண்கள் கவனம் செலுத்தும் பகுதிதான் நடுப்பார்வை. விழிப்புள்ளி சிதைவு எனும் குறைபாடால் நடுப்பார்வை பாதிக்கப்படும். விழித்திரை வீக்கத்தால் விழித்திரையின் (Retina) நடுப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்படும். பக்கப் பார்வையை இது பாதிக்காது.

விழித்திரை வீக்கத்தால் பாதிக்கப்பட்டவரது பார்வை கீழே குறிப்பிட்டுள்ளது போன்று இருக்கும்:

சாதாரண பார்வை
விழிப்புள்ளி சிதைவு

காரணங்களும் அபாயக் காரணிகளும்:
இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. பொதுவாக, வயதாவதால் இது ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது விழிப்புள்ளி சிதைவு இருந்தால் உங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

விழித்திரை வீக்கத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க, நீங்கள் செய்ய வேண்டியவை:

  • சமச்சீரான சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளவும். சீரான உடல் எடையைப் பராமரிக்கவும்.
  • சூரிய வெளிச்சத்தில் வெளியில் செல்லும்போது கருப்பு கண்ணாடி (sun Glass) அணியவும்.
  • மதுப்பழக்கம் இருந்தால் உடனடியாகக் குறைத்துக்கொள்ளவும்
  • புகைப்பழக்கத்தை விட்டொழிக்கவும்.
  • கணினி, லேப்டாப் மற்றும் அலைபேசி போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்து கொள்ளவும்.

அறிகுறிகள்:

விழிப்புள்ளி சிதைவு இருப்பதைக் கண்டறிய முடியாது. ஏனெனில் கண்களில் வலி இருக்காது. இருப்பினும், சில முக்கிய அறிகுறிகள் தோன்றும்:

  • பிறரின் முகங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுதல்.
  • நேராக உள்ள பொருட்கள் வளைந்து தோன்றலாம்.
  • ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ நடுப்பார்வை குறைந்து காணப்படும்.
  • படிக்கும்போதோ அருகில் உள்ளவற்றை பார்த்து செய்யும் பணிகளில் ஈடுபடும்போதோ அதிக வெளிச்சம் தேவைப்படலாம்.

விழிப்புள்ளி சிதைவின் வகைகள்:

இரு வகையான விழிப்புள்ளி சிதைவுகள் உள்ளன. உலர் (Dry) மற்றும் ஈரம் (Wet).

உலர் விழிப்புள்ளி சிதைவு என்பது பொதுவாக காணப்படுவது. இதில் ஆபத்து குறைவாகவே இருக்கும். புரோட்டீன் மூலப்பொருட்களால் விழித்திரையின் நடுவில் உள்ள மெகுலா மெதுவாக பாதிக்கும். மெதுவாக பாதிக்கப்படுவதால் பார்வையிழப்பும் மெதுவாகவே ஏற்படும்.

ஈரத்தன்மையுடன் கூடிய விழிப்புள்ளி சிதைவு என்பது ஆபத்தானது. மெகுலாவின் அடிப்பகுதியில் இரத்த நாளங்கள் வளரும்போது இவை ஏற்படும். சில நாட்களில் பார்வையிழப்பு ஏற்பட்டு விடும். இளைஞர்கள் கூட இந்த வகை பாதிப்பால் பார்வையிழக்கக்கூடும். இளம் வயதில் ஏற்படும் விழித்திரை வீக்கம் என்று அழைக்கப்படும். மரபணு சிக்கல் காரணமாக இது ஏற்படலாம்.

சிகிச்சை:

விழித்திரை வீக்கத்திற்கு முழுமையான சிகிச்சை கிடையாது. இருப்பினும், பார்வையிழப்பைத் தாமதப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம். ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பார்வையிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உலர் விழிப்புள்ளி சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருக்கும் பார்வையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவர்கள், குறை பார்வை மருத்துவப் பிரிவிற்கு பரிந்துரைக்கப்படுவார்கள். மற்றவர்களைப் போல இயல்பாக வாழ்வை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படும். தினசரி வாழ்விற்கு பயன்படும் வகையில் சாதனங்களை (Visual Aids) அங்கு பெற்றுக் கொள்ளலாம்.

ஈரத்தன்மையுடன் கூடிய விழிப்புள்ளி சிதைவு நோய்க்கு மருத்துவர்கள் லேசர் சிகிச்சையையோ விழித்திரை ஊசிகளையோ பரிந்துரைப்பார்கள். லேசர் சிகிச்சையின்போது ஒளிக்கற்றையானது (Beam of light) தேவையற்ற இரத்த நாளங்களின் மீது செலுத்தப்படும். இதனால் மேற்கொண்டு இரத்தம் வடிவது நிறுத்தப்படும். விழித்திரை ஊசி என்பது மிக கவனமாக கண்ணில் செலுத்தப்படும் ஊசி. இந்த ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்தால் தேவையற்ற இரத்த நாளங்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

ஆரோக்கியமான, சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலம் பார்வையிழபைத் தாமதப்படுத்த முடியும். வைட்டமின் அதிகமுள்ள உணவில் கண்களுக்கு தேவையான சத்துகள் உள்ளன. ஆரஞ்சுப்பழம், கீரை, தக்காளி மற்றும் கேரட்களில் சத்துகள் உள்ளன. இவற்றை உண்பது சிகிச்சை முறையல்ல. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை உதவும்.

Back to English version