அறிமுகம்:
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் கண் நரம்புகள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. சில குழந்தைகளுக்கு இயல்பான வளர்ச்சி இருக்காது. முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த முறையற்ற வளர்ச்சியால் கண்ணின் பின்பகுதியில் உள்ள விழித்திரையும் இரத்த நாளங்களும் பாதிக்கப்படும்.
அபாயக் காரணிகள்:
குறைமாதத்தில் பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளதால் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
விழித்திரை பரிசோதனை – யாருக்கு செய்ய வேண்டும்?
  • 1750 கிராம் எடைக்கு குறைவான குழந்தைகள்.
  • கருவுற்று 34 வாரங்களுக்குள் பிறந்த குழந்தைகள்
  • இரத்தத்தில் நச்சு, சுவாசக் கோளாறு போன்ற தீவிர நோய்களுடன் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்
விழித்திரை பரிசோதனை – எப்போது செய்ய வேண்டும்?
1200 கிராம் எடைக்கு குறைவான எடையுள்ள குழந்தைகள் அல்லது 28 வாரங்களுக்கு முன்னதாகப் பிறந்த குழந்தைகளைப் பிறந்த 2-3 வாரங்களில் பரிசோதிக்க வேண்டும். குறைமாதத்தில் பிறந்த அனைத்து பிற குழந்தைகளையும் பிறந்து ஒரு மாதத்தில் பரிசோதிக்க வேண்டும்.
 விழித்திரை பரிசோதனை – எவ்வாறு செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தையின் விழித்திரை நன்றாக உள்ளதா என்பதை விழித்திரை சிறப்பு மருத்துவர் பரிசோதிப்பார்.
சிகிச்சை:
நோயின் தீவிரத்தைப் பொறுத்து உங்கள் குழந்தைக்கு லேசர் சிகிச்சை, விழித்திரை ஊசி அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும். மிகக்குறைவாக நோயின் தாக்கம் இருந்தால் இயல்பாகவே சரியாகிவிடும்.
தொடர் பரிசோதனை:
  • வாழ்நாள் முழுவதும், வருடத்திற்கு ஒருமுறை சிகிச்சை எடுப்பது அவசியம்.
  • விழித்திரை நோய் இல்லாத குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
Back to English Version