அறிமுகம்:
கருவிழியில் ஏற்படும் வீக்கம், புண் காரணமாக இவை ஏற்படலாம். பொதுவாக, ஒவ்வாமை (அழற்சி) காரணமாக இவை ஏற்படும். கண்ணில் அடிபட்டாலும் இவை ஏற்படலாம். கருவிழி புண்ணிற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாகும்.காரணங்கள்:
- கண்ணில் காயம்
- அழுக்கடைந்த காண்டாக்ட் லென்ஸ்
- வைரஸ்
- அசுத்தமான நீர்
அபாயக் காரணிகள்:
- குறைவான நோய் எதிர்ப்புத் திறன்
- வெப்ப வானிலை
- சில வகை சொட்டு மருந்துகள்
- கண்ணில் காயம்
- காண்டாக்ட் லென்ஸ்
- நீச்சலின்போது அல்லது அறிவுறுத்தப்பட்ட நேரத்தைத் தாண்டி காண்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்தக்கூடாது.
- சரியான மருந்து (solution) கொண்டு காண்டாக்ட் லென்ஸ்களை எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும்.
- ஆறுகள் மற்றும் அசுத்தமான நீரில் குளிக்கக்கூடாது.
அறிகுறிகள்:
- கண்கள் சிவப்படைதல்
- கண்ணில் வலி
- வழக்கத்தை விட அதிகமான கண்ணீர் வடிதல்
- கண் இமையைத் திறக்க கடினமாக இருத்தல்
- ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல்
- கண்ணில் ஏதோ விழுந்தது போன்ற உணர்வு
- மங்கலான பார்வை
சிகிச்சை:
ஒவ்வாமை ஏற்பட்ட காரணத்தைப் பொறுத்து, கருவிழி புண்களுக்கான சிகிச்சை மாறுபடும். பாக்டிரியா அல்லது பூஞ்சைகளால் ஏற்பட்ட புண்ணைக் குணப்படுத்த, பிரத்யேக சொட்டு மருந்துகள் (Antibacterial and antifungal eye drops) உள்ளன. வைரஸ்களால் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்த, பிரத்யேக சொட்டு மருந்துகள் (Antiviral eye drops ) உள்ளன. இந்த வைரஸ் மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளது. மருந்துகளால் புண் ஆறவில்லை எனில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
கருவிழி புண் காரணமாக உண்டாகும் வலி எப்போது குறையும்?
மருந்து பயன்படுத்தத் துவங்கியதும் வலி குறையத் தொடங்கும். வலி நிவாரணி மாத்திரைகளாலும் வலி குறையும்.
-
எனது பார்வை மீண்டும் கிடைக்குமா?
புண் குணமடைந்த பிறகு, சிறப்பான பார்வைக்கு கண்ணாடி அணியும் தேவையோ அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் தேவையோ இருக்கலாம்.
-
புண் எப்போது குணமடையும்? எத்தனை நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்?
புண்ணின் அளவைப் பொறுத்து இது மாறுபடும். புண் ஏற்படுவதற்கான காரணமும் முக்கியம். பூஞ்சை காரணமாக உண்டாகும் புண் குணமடைய தாமதமாகும். வேகமாக குணமடைய, உங்களது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பரிந்துரைத்தபடி சொட்டு மருந்துகள் போட்டுக் கொள்வதும் அவசியம்.
-
மறுபரிசோதனைக்கு எப்போது மீண்டும் வர வேண்டும்?
மருத்துவர் குறிப்பிடும் நாட்களில் தவறாமல் மறுபரிசோதனைக்கு வர வேண்டும்.
-
எப்போது தலை குளிப்பது?
புண் முற்றிலும் குணமடைந்ததும் தலை குளிக்கலாம். அதனை மருத்துவர் தெரிவிப்பார்.
-
அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு பார்வை கிடைக்குமா?
அறுவை சிகிச்சை என்பது கடைசி வாய்ப்புதான். அறுவை சிகிச்சை மூலம் பார்வை மேம்படலாம். மருந்துகள், அறுவை சிகிச்சை மூலம் புண் குணமடையவில்லை எனில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.
Back to English Version