அறிமுகம்:
ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக கண்களில் நோய் ஏற்படும். அதிகளவில் புகை அல்லது தூசியானது உங்கள் குழந்தையின் கண்களில் பட்டால் அவர்களின் கண்கள் சிவப்பாவதுடன் அரிப்பு உணர்வையும் உண்டாக்கும். மிக அரிதாகவே பார்வை பாதிக்கப்படும். இருப்பினும், கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நலம்.
காரணங்கள் மற்றும் அபாயக் காரணிகள்:
ஒவ்வாமை ஏற்பட்டால் கண்களில் உறுத்தல் ஏற்படும். ஒவ்வாமை எற்படுவதற்கான காரணங்கள்:
- புகை,
- தூசி,
- மாசு,
- செல்லப் பிராணிகளின் முடி
அறிகுறிகள்:
- கண்களில் அரிப்பு ஏற்படுதல்,
- கண் சிவப்பாகுதல்,
- கண்களில் நீர் வடிதல்,
- Ropy mucus
செய்யக்கூடியவை:
- வெளியில் செல்லும்போது கண்ணாடி அணிய வலியுறுத்துதல்
- உங்கள் கைகளையும் கண்களையும் அவ்வபோது சுத்தம் செய்தல்
- அரிப்பு உணர்வைக் குறைக்க, குழந்தைகளின் கண் இமைகளில் ஐஸ்கட்டி பைகளை வைக்கவும்
- கண் மருத்துவரிடம் தவறாமல் பரிசோதனை செய்யவும்
செய்யக்கூடாதவை:
- தூசி, புகை அதிகம் உள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்.
- கண்களை அடிக்கடி தேய்க்ககூடாது.
- காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தக்கூடாது.
- பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதால் மருத்துவர் பரிந்துரையின்றி சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தகூடாது.
சிகிச்சை:
ஒவ்வாமை காரணமாக ஏற்படும் கண் வலிகள், ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். கண் மருத்துவர் பரிந்துரையின்படி அலர்ஜியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளே பெரும்பாலும் போதுமானது. மிக அரிதாக, கண் மருத்துவர் ஸ்டிராய்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருத்துவரின் அறிவுரையின்படி மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
Back to English Version