அறிமுகம்:
கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, ஒளியை உணரும் நரம்பு செல்களால் ஆனதால் நம்மால் பார்க்க முடிகிறது. பொதுவாக, இந்த நரம்பு செல்கள், உங்கள் தமனியிலிருந்து சத்துகளை எடுத்துக் கொண்டு கழிவுகளை உங்கள் நரம்புகளில் செலுத்தும். ஆனால், நரம்பு அடைக்கப்பட்டால் விழித்திரையிலிருந்து ரத்தம் வெளியேறாது. மாற்றாக, நரம்பை விட்டு திரவம் வெளியேறும். இதுவே விழித்திரை இரத்த நாள அடைப்பு எனப்படும்.காரணங்கள் மற்றும் அபாயக் காரணிகள்:
விழித்திரை நரம்புகள், மிகவும் குறுகியது. இந்த நரம்புகளைப் பெரிய கட்டி, கடந்து செல்ல முயற்சிக்கும்போது அது நரம்பை அடைத்து விடும். இதனால் விழித்திரை இரத்த நாள அடைப்பு தோன்றும். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு மற்றும் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் உடல்நல சிக்கல்கள் உள்ளவர்களுக்கு இந்த சிக்கல் தோன்றும் அபாயம் அதிகம் உள்ளது.அறிகுறிகள்:
பெரும்பாலும், இது ஒரு கண்ணில் ஏற்படும். இதன் அறிகுறிகள்:- மங்கலான பார்வை திடீரென இன்னும் மோசமடையும்
- திடீரென பார்வையிழப்பு ஏற்படும்.
சிகிச்சை:
- விழித்திரை ஊசி
- லேசர் அறுவை சிகிச்சை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
விழித்திரை இரத்த நாள அடைப்பு (Retinal vein occlusion) காரணமாக எனது பார்வை பறிபோகுமா?
ஆம். விழித்திரையில் நரம்பு அடைபட்டால் கண்ணில் பல சிக்கல்கள் உருவாகும்.
-
நரம்பு வீக்கம் (Macular edema):
நரம்பு அடைக்கப்படும்போது, விழித்திரையைச் சுற்றி திரவம் வழியக்கூடும். விழித்திரையின் நடுப்பகுதியை (macula) சுற்றி இரத்தம் வழிந்தால், வீக்கம் ஏற்படும். இதனால் மங்கலான பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படும்.
-
புதிய இரத்த நாளங்கள் (Neovascularization):
அடைபட்ட நரம்புகளிலிருந்து விடுபட, புதிய, இயல்பற்ற இரத்த நாளங்களை கண் வளர்க்க முற்படும். இவற்றால்கூட கண்ணுக்குள் திரவம் வடியும். இதனாலும் பாதிப்பு ஏற்படும்.
-
கண் நீர் அழுத்தம் (Glaucoma):
கண்ணில் புதிய இரத்த நாளங்கள் வளர்ந்தால் அழுத்தத்தை அதிகரிக்கும். அதிக அழுத்தம், பார்வை நரம்பைப் பாதிக்கும். இது கண் நீர் அழுத்தம் (Glaucoma) எனப்படும்.
-
சிகிச்சைக்கு பிறகு எனது கண்கள் எவ்வளவு விரைவில் குணமடையும்?
இது, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நாளடைவில் மூன்றில் இருவருக்கு பார்வை சிறிது மேம்படும். மீதமுள்ளவருக்கு படிப்படியாக மேம்படும். சிறந்த முடிவுகளுக்கு அனைத்து நோயாளிகளும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கண்களில் இரத்தம் கட்டியுள்ளதா என்பதை உங்களது பொது மருத்துவரிடம் அவ்வபோது பரிசோதிக்க வேண்டும்.
Back to English Version