அறிமுகம்:

பார்வை பாதிக்கப்பட்டவரின் கண்களை குணப்படுத்த முடியாத நிலைக்கு குறை பார்வை என்றே பெயர். எந்த வயதிலும் இந்த நிலை தோன்றலாம்.  குறைபாடு உள்ளவர்கள், முழு பார்வையிழப்பிற்கும் உள்ளாகலாம். முழு பார்வையிழப்பால் பாதிக்கப்படாமலும் இருக்கலாம். மீதமுள்ள பார்வையை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.  குறை பார்வை உள்ளவர்கள், மன உறுதியுடன் வாழ்வை எதிர்கொள்ள போதிய பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் அரவிந்தின் குறை பார்வை ஆலோசனை வழங்குகிறது.

குறைபார்வை உள்ளதை கண்டறிய உதவும் அறிகுறிகள்:

  • நிறங்களைப் பார்க்கும்போது மங்கலாகத் தெரிதல்
  • நேராக உள்ள கோடுகள் வளைந்து தெரிதல்
  • அருகில் உள்ள பொருட்கள், மங்கலாகத் தெரிதல்
  • தூரத்தில் உள்ள பொருட்கள், மங்கலாகத்தெரிதல்
  • இரவில் பார்க்க கடினமாக இருத்தல்
  • பகல் வெளிச்சத்தில்அதிக கண் கூச்சம்

மேற்கூறிய பாதிப்புகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கண் மருத்துவரிடம் விரிவான கண் பரிசோதனை செய்து, குறைபார்வையா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் பார்வையில் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால் அலட்சியம் காட்டாமல், உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

குறைபார்வை பாதிப்பு எந்த வயதினருக்கும் ஏற்படலாம்:

ஆரம்பத்தில் பார்வையிழப்பு என்பதை மனதளவில்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இது வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பது பார்வையை இழக்கும் வயதை பொருத்தது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைபார்வை ஆலோசனை மையத்தில் பல சேவைகள் வழங்கப்படும்.

  • ஆலோசனை (Counseling) :

பாதிக்கப்பட்டவர்களின் நிலையையும், அவரது குடும்பத்தினரின் நிலையையும் ஆலோசகர் அறிந்து கொள்ள முயற்சிப்பார்.  குறைபார்வை சேவைகளை பெற்ற பிறகு அவரால் எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பதையும் விளக்குவார்.

  • பயிற்சி (Mobility Training)

பாதிக்கப்பட்டவர்களின் தினசரி செயல்பாடுகளையும், வயதையும் பொறுத்து பயிற்சிகள் முடிவு செய்யப்படும். எது தேவையோ, பொருந்துமோ அதுகுறித்து பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் நோக்கமே, குறைபார்வையால் பாதிக்கப்பட்டவர்களை தன்னிச்சையாக செயல்பட வைப்பதுதான். பணத்தை எண்ணுதல், பிரைலி முறையில் படித்தல், டிஜிட்டல் கருவிகள் மூலம் படித்தல், மென்பொருளின் உதவி கொண்டு கணினி இயக்குதல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும்.

  • அரசு வழங்கும் சலுகைகள்:

பார்வையிழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப்கள், சேவைகள், சலுகைகள் பற்றி தெரிவிக்கப்படும். அவற்றை எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற விவரங்களும் தெரிவிக்கப்படும்.

  • Magnifying Glasses/ Magnifiers:

குறைபார்வை உள்ளவர்களுக்கு சிறப்பு கண்ணாடி (Magnifying Glasses/ Magnifiers) மூலம் அவர்கள் படிப்பதற்கு இயலுமானால் அவை கொடுக்கப்படும். இதன் மூலம் மாணவ/மாணவிகள் நன்கு பயன் அடைவர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் குறை பார்வை

குழந்தைகளுக்கு குறைபார்வை பாதிப்பு ஏற்பட்டால் அக்குழந்தையின் வாழ்க்கையே பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும். அவர்களால் உலகை, தன்னைச் சுற்றி நடப்பவற்றை பார்க்கவும் முடியாது, கல்வி கற்கவும் முடியாது. பிறக்கும்போது ஏற்படும் விபத்துக்கள் /எதிர்பாராத காயங்கள், கண்புரை, மூளையில் காயம் ஆகியவற்றால்கூட குறைபாடு ஏற்படலாம்.

அரவிந்தில் குறைபார்வை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இவற்றின் மூலம் சுதந்திரமாக, யாரையும் சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாக குழந்தைகள் செயல்பட பயிற்சிகள் அளிக்கப்படும்..

  • பார்வையைத் தூண்டும் தெரபி ( Vision Stimulation Theraphy):

கைக்குழந்தைகள் முதல் ஐந்து வயதுள்ள குறை பார்வையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எஞ்சியுள்ள பார்வையைத் தூண்ட இந்த தெரபி அளிக்கப்படுகிறது. இதில் பல படிமுறைகள் உள்ளன.

  • பார்ப்பவற்றை அறிவு மூலம் உணரும் மதிப்பீடு (Cognitive Visual Assessment):

குறைபார்வையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் இருக்கும். இதனை களையும் விதமாக பார்ப்பவற்றை அறிவு மூலம் உணரும் மதிப்பீடு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் விளைவாக குழந்தைகளின் பார்த்து உணரும் திறன் மேம்படும்.

  • ஒருங்கிணைந்த கல்வி குறித்த ஆலோசனை(Counselling On Integrated Education):

பள்ளிகளில் படிப்பதில் குறைபார்வை உள்ள குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படும். ஏனெனில் கணிதம், புத்தகங்களைப் படித்தல் போன்ற கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இவர்களால் ஈடுபடுவது கடினம். இவர்களுக்கு மேலும் கரும்பலகை பார்ப்பதற்கு மற்றும் படிப்பதற்கு Optical Devices வழங்கப்படும். இவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் (Special Schools) மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிகள் (Integrated Schools) பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும். வழக்கமான பள்ளிகள் போன்றே இந்த பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டாலும், குறைபாடு உள்ளவர்களுக்கான கருவிகளை குழந்தைகளுக்கு கொடுப்பது கல்வி கற்பது எளிமையாகிறது. தன்னிச்சையாக பிறரை எதிர்பாராமல் இயல்பாக வாழ்வை எதிர் கொள்ளவும், இந்த பள்ளிகள் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றன.

  • ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் (Early Intervention Program)

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பயிற்சியும் தெரபியும் அளிக்கும் திட்டம் இது. இதன் மூலம் தன்னைச் சுற்றி நடப்பவற்றை உணர்ந்து இயல்பாக வளரும் விதம் குழந்தைகளுக்கு உண்டாகிறது.

பெரியவர்களுக்கான குறை பார்வை

18 – 50 வயதினருக்கு குறைபார்வை பாதிப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் ஆளாவார்கள். தங்கள் குடும்பத்தினரை மிகவும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். மறு வாழ்வு பற்றிய ஆலோசனைகளும் நிச்சயம் அவர்கள் வாழ்வை அன்றாட செயல்பாடுகளை மேம்படுத்தும்.

காரணங்கள்:

முற்றிய விழித்திரை நோய்கள்

விபத்து / கண்களில் அடிபடுதல்

மூளை தொடர்பான நோய்கள்

  • கல்வி கற்பதற்கான ஆடியோ மற்றும் மென்பொருள் சாதனங்கள்:

குறைபார்வை உள்ளவர்களுக்கு கற்றுக்கொள்ளும் திறன் பாதிக்கப்படும். ஆனால் அதற்காக துவண்டுவிட தேவையில்லை.  Magnifier கருவிமூலம் பார்வையில் மேம்பாடு இருந்தால் அதைக் கொண்டு படிக்கலாம். பள்ளிப் பாடங்கள் BA, MA போன்ற சில கல்லூரி படிப்புகளுக்கான பாடங்கள் ஆடியோ மற்றும் மென்பொருள் முறையில் கிடைக்கின்றன. பிரத்யேக  கணினி மென்பொருளானது பாடங்களை வாசித்துக் காட்டும். இவற்றைக் கேட்டு, கற்றுக்கொள்ளலாம். தன்னார்வலர்கள், பாடங்களை வாசித்து ஆடியோ வடிவில் பதிவு செய்து குறைபார்வை உள்ளவர்களுக்கும், பார்வை இழந்தவர்களுக்கும் அளிக்கிறார்கள். இதன் மூலமும் கற்கலாம். இந்த உதவிகளை எவ்வாறு எங்கே பெறுவது போன்ற விவரங்கள் குறைபார்வை ஆலோசனை மையத்தில் வழங்கப்படும்.

  • பயிற்சி ( Mobility Training ):

குறைபார்வை உள்ளவர்கள், தங்களது தினசரி செயல்பாடுகளை மேற்கொள்ளவும், பிறரைச் சார்ந்து இருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படும்.  சாலைகளை கடக்கவும், கேன் (Cane) எனப்படும் குச்சியை பயன்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படும். குறைபார்வை உள்ளவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சாதனங்கள் கருவிகள் குறித்த அறிமுகங்களும், விளக்கங்களும் வழங்கப்படும். தேவைப்படுபவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

  • கணினி பயிற்சி:

கணினியை இயல்பாக உள்ளவர்கள் பயன்படுத்துவது போலவே குறை பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் பயன்படுத்த செய்முறைப் பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

  • பணி வழிகாட்டுதல்:

பணியிடங்களில் தேவைப்படும் தொழில்முறை திறன்கள் (Professional Skills) கற்று தரப்படும். குறைபாடு உள்ளவர்களுக்கு பொருந்தும் பணிகள் குறித்த விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் குறை பார்வை

பொதுவாகவே  வயதானவர்கள் பிறரை ஓரளவு சார்ந்திருப்பார்கள்.  குறைபார்வையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களது நிலை கடினமானதுதான். இத்தனை காலம் பிறரைச் சார்ந்து இல்லாமல் வாழ்ந்து விட்டு தற்போது பிறரின் ஆதரவையும் உதவியையும் எதிர்பார்ப்பது சிரமமானதுதான். சிலருக்கு தனிமையும் ஆதரவற்ற நிலையும் கூட ஏற்படலாம்.

காரணங்கள்:

விழிப்புள்ளி சிதைவு (Magular Degenaration)

கண்நீர் அழுத்தம் (Glaucoma)

சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் (Diabetic Retinopathy)

  • பயிற்சி (Mobility Training):

பாதிக்கப்பட்டவர்களின் தினசரி செயல்பாடுகளையும் வயதையும் பொறுத்து பயிற்சிகள் முடிவு செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, துணையாக இருப்பதற்கு நாயை (Guide Dog) வைத்துக் கொள்ள பயிற்சி, நடக்கும்போது உதவ குச்சி (Cane) என பல உள்ளன.  இவற்றில் நோயாளிகளுக்கு தேவைப்படுபவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளில் நோக்கமே குறைபார்வை உள்ளவர்களைத் தன்னிச்சையாக செயல்பட வைப்பது தான். பணத்தை எண்ணுதல், பிரைலி முறையில் படித்தல், மென்பொருளின் உதவியுடன் கணினி இயக்குதல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும்.

  • டிஜிட்டல் சாதனங்கள்

ஸ்மார்ட்ஃ போன் ஆப்கள் (Smart Phone Apps) மற்றும் நவீன  பிரத்யேக டிஜிட்டல் கருவிகள் குறித்த அறிமுகங்களும், விளக்கங்களும், ஆலோசனைகளும், குறைபார்வையால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு அளிக்கப்படும்.

Magnifying Glasses/Magnifiersகொண்டு (Newspaper) படிப்பதற்கு இயலுமானால் அவை கொடுக்கப்படும்.

 பொதுவாக வயதானவர்கள், பிறரை ஓரளவு சார்ந்திருப்பார்கள் பார்வையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களது நிலை கடினமானதுதான். இத்தனை காலம் பிறரைச் சார்ந்து இல்லாமல் வாழ்ந்து விட்டு தற்போது பெரும் ஆதரவையும் உதவியையும் எதிர்பார்ப்பது சிரமமானதுதான். சிலருக்கு தனிமையான நிலை கூட ஏற்படலாம்.  விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி செயல்பாடுகளையும் வயதையும் பொறுத்து பயிற்சிகள் முடிவு செய்யப்படும்

குறைபார்வை கருவிகள் (Low Vision Devices):

குறைபார்வை உள்ளவர்களுக்கு அவர்கள் பார்க்கும் எழுத்துக்கள்/வடிவங்கள் சற்று பெரிதாக்கி பார்க்க குறைபார்வை கருவிகள் உதவும். தூரப்பார்வைக்கு தொலைநோக்கியும், கிட்டப்பார்வைக்கு உருப்பெருக்கியும் உபயோகிக்கலாம். அவை குறைபார்வை உள்ளவர்களின் பார்வை மற்றும் அவர்களின் தேவைக்கு ஏற்ப கொடுக்கப்படும்.

  • குழந்தைகளுக்கு குறைபார்வை கருவிகள் :

குறைபார்வை உள்ள குழந்தைகளுக்கு முக்கியமாக பள்ளியில் கரும்பலகை பார்ப்பதற்கு சிரமம் ஏற்படும். அதற்கு தொலைநோக்கி அவர்களுக்கு உதவுமானால் அவை வழங்கப்படும். மேலும் படிப்பதற்கு சிரமம் இருந்தால் உருப்பெருக்கி, (Magnifiers) அல்லது Electronic Video Magnifier வழங்கப்படும். இவை அனைத்தும் சிறிய எழுத்துக்களைப்  பெரிதாக்கி காட்ட உதவும். மேலும் குழந்தைகள் பள்ளியில் முதல் வரிசையில் அமர்வதற்கும் எழுத்துக்களை கரும்பலகையில் முதல் வரிசையில் அமர்வதற்கும், எழுத்துக்களை கரும்பலகையில் சற்று பெரிதாக எழுதுமாறும் ஆசிரியர்களுக்கு கடிதம் வழங்கப்படும். குழந்தைகள் நேராக எழுதுவதற்கும், எழுதியது நன்றாக தெரிவதற்கும் Bold Line Notebooks, Bold Pencil பரிந்துரை செய்யப்படும்.

  • பெரியவர்களுக்கான குறைபார்வைகருவிகள் :

கோப்புகள் (files), பில் (Bills) ஆகியவற்றைப் பார்ப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் உருப்பெருக்கி வழங்கப்படும். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு கருவிகள் கொடுக்கப்படும்.

  • வயதானவர்களுக்கான குறைபார்வை கருவிகள் :

வயதானவர்களின் முக்கியத் தேவை, நாளிதழ் படிப்பதே. அதற்கு உருபெருக்கி உதவுமானால் அவை கொடுக்கப்படும். மேலும் Contrast குறைவாக இருந்தால் அதற்கு பிரத்யேக மின் விளக்கு (Reading Glass) பரிந்துரை செய்யப்படும்.

Back to English Version